egsisi

No. 325, Bauddhaloka Mawatha, Colombo 07 | Tel : 0112693272 | Fax: 0112693271

egsita

பொலேகல பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு

பொலேகல மகாவித்யாலயத்தில் கல்வி கற்கும் ஊடகத்துறை மாணவர்கள் இலங்கை பத்திரிகை பேரவையின் நடைமுறை செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் 'தகவல்தொடர்பு கொள்கைகள் மற்றும் ஊடக கண்காணிப்பு' எனும் தலைப்பில் மாணவர்களின் கற்கைநெறி சார்ந்து கலந்துரையாடல் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது பாடசாலை அதிபர் மற்றும் ஊடகக்கற்கைநெறிக்கு பொறுப்பான ஆசிரியர் அவர்களின் வேண்டுதலிற்கிணங்க முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தகவல்தொடர்பு மற்றும் ஊடகக்கற்கைகளை முன்னெடுக்கும் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஊடக ஒழுங்கு மற்றும் நெறிமுறை தொடர்பிலான பேரவையின் கருத்தரங்குகளில் பங்குபற்றமுடியும். இதுமாத்திரமன்றி பாடசாலை மற்றும் நிறுவன ஊடக சங்கங்கள் எமது குழுவில் இணைவதன் மூலம் பேரவை முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. 

 

கொழும்பு, மிதக்கும் சந்தை மற்றும் புகையிரத நிலையம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட பத்திரிகை புகைப்படங்கள்

இலங்கை பத்திரிகை பேரவையினால் முன்னெடுக்கப்படும் இதழியல் சான்றிதழ் கற்கைநெறிக்கான அச்சு ஊடகத் துறையில் புகைப்படக்கலை எனும் தலைப்பில் நடைமுறை செயலமர்வு கொழும்பு, மிதக்கும் சந்தை மற்றும் புகையிரத நிலையத்தில் சிரேஷ்ட புகைப்படக்கலைஞர் திருமதி யமுனி ரஷ்மிகா பெரேராவினால் வழிநடத்தப்பட்டது.

மார்டின் விக்ரமசிங்கவின் ஊடகப்பங்களிப்பு

ஊடகக்கற்கைகள் மற்றும் ஊடகக்கற்கை நெறியை தொடரும்  VII தொகுதி மாணவர்களினால்  மார்டின் விக்கிரமசிங்கவின் ஊடகப்பங்களிப்பு எனும் தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் கொக்கல மார்டின் விக்கிரமசிங்க அருங்காட்சியத்திற்கான களவிஜயம் 08 யூன் 2019 அன்று இடம்பெற்றது. 

சயன்ஸ் இமேஜ் கல்வி நிலைய மாணவர்களின் கள ஆய்வுப் பயணம்

தொடர்பாடல் மற்றும் ஊடகக்கற்கைகள் பாடத்தை கற்கும் கடவத்த சயன்ஸ் இமேஜ் கல்வி நிலைய மாணவர்கள் 31.10.2022 அன்று ,லங்கை பத்திரிகை பேரவையின் செயற்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கான கள ஆய்வுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இந்த பயணம் ஆசிரியர் திரு. உபுல் மானப்பெரும அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்> பேரவை ஆணையாளர் திரு. நிரோஷன தம்பவிட்ட உட்பட பேரவையின் அதிகாரிகள் சபையின் நடவடிக்கை தொடர்பில் மாணவர்களுக்கு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தனர். இதேவேளை தகவல்தொடர்பு மற்றும் ஊடகக்கற்கைகளை முன்னெடுக்கும் பாடசாலைகள் மற்றும் நிறுவனங்கள் ஊடக ஒழுங்கு மற்றும் நெறிமுறை தொடர்பிலான பேரவையின் கருத்தரங்குகளில் பங்குபற்றமுடியும். இதுமாத்திரமன்றி பாடசாலை மற்றும் நிறுவன ஊடக சங்கங்கள் எமது குழுவில் இணைவதன் மூலம் பேரவை முன்னெடுக்கும் நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. 

மாணவர்களுக்கான குறுகிய ஆவணப்படங்கள்

ஊடக கற்கைகள் மற்றும இதழியல் சான்றிதழ் கற்கைநெறியை தொடரும் மாணவர்களுக்கான குறுகிய ஆவணப்படங்கள் தொடர்பான நடைமுறைப்பட்டறை

ஒழுங்கமைப்பு -  களனிப்பல்கலைக்கழக பொதுசன ஊடகத்துறையின் தலைவரும் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு.அருண லொக்குலியன, சிரேஸ்ட விரிவுரையாளர் திரு.தர்ஷன மாபா பத்திரகே.

தொடர்பாடல் மற்றும் ஊடகக்கற்கை ஆசிரியர்களுக்கான தொடர் கருத்தரங்கு (மத்திய மாகாணம்)

ஒழுங்கமைப்பு : இலங்கை பத்திரிகை பேரவை

இலங்கை பத்திரிகை பேரவையால் மத்திய மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வு 25 செப்ரம்பர் மாதம் 2020 அன்று கண்டியில் இடம்பெற்றது. களனிப்பல்கலைக்கழக பொதுசன ஊடகத்துறையின் தலைவரும் மற்றும் சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு.அருண லொக்குலியன, சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. மனோஜ் புஸ்பகுமார ஜினதாஸ, ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். தொடர்பாடல் மற்றும் ஊடகக்கற்கை நெறியை கற்பிக்கும் பல ஆசிரியர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் பேரவையின் தலைவர், மாகாண கல்விப்பணிப்பாளர், பேரவை ஆணையாளர், பதில் ஆணையாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
 

கொக்கல மார்டின் விக்ரமசிங்க நாட்டுப்புற அருங்காட்சிய ஆய்வுச் சுற்றுலா

இலங்கை பத்திரிகை பேரவையினால் முன்னெடுக்கப்படும் இதழியல் மற்றும் ஊடகக்கற்கைகளுக்கான ஆறாவது அணியினருக்கான, கொக்கல மார்டின் விக்ரமசிங்க நாட்டுப்புற அருங்காட்சியத்தை பார்வையிடுவதற்காக ஆய்வு சுற்றுலா  ஒன்றை 29.10.2022 அன்று மேற்கொண்டிருந்தனர்.

குறித்த ஆய்வு சுற்றுலாவை மேற்கொண்டதன் நோக்கம், உள்ளுர் இலக்கியத்தை வளர்ப்பதில் தனித்துவமான பணியில் ஈடுபட்டிருந்த மார்டின் விக்ரமசிங்கவின் பத்திரிகை பணி தொடர்பான புரிதலை மாணவர்களுக்கு வழங்குவதும், தகவல்தொடர்பாடல் தொடர்பிலான நடைமுறை செயன்முறையை மாணவர்களுக்கு வழங்குவதுமாகும்.  

இந்த ஆய்வுச்சுற்றுலாவானது கற்கைநெறியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுனந்த மகேந்தரவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாணவர்கள் திரு. மார்டின் விக்ரமசிங்க எழுதிய சிறுகதை ஒன்றை அடிப்படையாகக்கொண்டு நாடகம் ஒன்றை அரங்கேற்றினர். இதுமாத்திரமன்றி; சிலுமின பத்திரிகையின் பிரதம ஆசிரியரின்  மார்டின் விக்ரமசிங்க தொடர்பான குறும்படம் ஒன்றும் மாணவர்களுக்காக ஒளிபரப்பபட்டது.

இதேவேளை மார்டின் விக்ரமசிங்க நாட்டுப்புற அருங்காட்சியத்தின் நூலகத்திற்காக பேரவையின் வெளியீடுகளை பேரவை ஆணையாளர் நிரோசன தம்பவிட்ட வழங்கி வைத்தார். இந்த ஆய்வுச்சுற்றுலா கல்விப்பயணத்தை முழுமைப்படுத்திய அனைவருக்கும் எனமு நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

வடமத்திய மாகாண ஆசிரியர்களுக்கான செயலமர்வு

இலங்கை பத்திரிகை பேரவையால் மத்திய மாகாணத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வு 14 பெப்ரவரி  மாதம் 2020 அன்று வடமத்திய மாகாண வள அலுவலக கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. 

இந்த பயிற்சி பட்டறை நிகழ்வை பேராசிரியர் சந்திரசிறி ராஜபக்ச மற்றும் கலாநிதி ரூடர் விஜேசிங்க ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர். தொடர்பாடல் மற்றும் ஊடகக்கற்கை நெறியை கற்பிக்கும் பல ஆசிரியர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

வடமத்திய மாகாண தொடர்பாடல் கற்கைநெறி இயக்குநர் பேரவையின் தலைவர், மாகாண கல்விப்பணிப்பாளர், பேரவை ஆணையாளர், பதில் ஆணையாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

Image